JEEVA PRESS
Terms & Conditions
நியமங்கள் மற்றும் நிபந்தனைகள்
Please read these terms before confirming an estimate or placing a print order with JEEVA PRESS. Confirming an estimate on this website means you accept them.ஆர்டர் உறுதிப்படுத்துவதற்கு முன் இந்நியமங்களைப் படிக்கவும். வலைத்தளத்தில் மதிப்பீட்டை உறுதிப்படுத்தினால் இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பதாகப் பொருள்.
Last updated · கடைசி மாற்றம்: 30 October 2026
1. Estimates & prices · மதிப்பீடு மற்றும் விலை
The estimate shown on this website is based on the item, finished size, GSM, quantity, sides, colour and finishing options you select. Changing any of these changes the price.
வலைத்தளத்தில் காட்டப்படும் மதிப்பீடு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருள், அளவு, GSM, எண்ணிக்கை, பக்கம், நிறம் மற்றும் பினிசிங் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இவற்றில் ஒன்றை மாற்றினால் விலையும் மாறும்.
The website total includes GST at 18%. Paper prices follow our office rate list on the day of the order, so a price may change if paper rates move or the selected quantity is not available.
வலைத்தளத் தொகையில் 18% GST சேர்க்கப்பட்டுள்ளது. பேப்பர் விலை ஆர்டர் நாளில் எங்கள் அலுவலக விலைப்பட்டியலைப் பொறுத்தது; பேப்பர் விலை மாறினால் அல்லது தேர்ந்த எண்ணிக்கை கிடைக்காவிட்டால் விலை மாறலாம்.
An estimate is valid for 7 days from the day it is given.
ஒரு மதிப்பீடு கொடுத்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
2. Orders · ஆர்டர்கள்
Orders are processed only after the estimate is confirmed and 100% of the payment is received. Stock position does not block an order — we arrange the paper after your confirmation.
மதிப்பீட்டை உறுதிப்படுத்தி, முழுத் தொகையையும் (100%) செலுத்திய பிறகே ஆர்டர் செயல்படுத்தப்படும். கையிருப்பு இல்லாவிட்டாலும் ஆர்டர் நிராகரிக்கப்படாது; உறுதிப்படுத்திய பிறகு நாங்கள் காகிதம் வாங்குகிறோம்.
Designs and orders are accepted from 10 AM to 11 PM, India time.
காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை டிசைன்களும் ஆர்டர்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
Any change to size, quantity, paper, colour or finishing after confirmation is treated as a new job and may need a fresh estimate and payment.
உறுதிப்படுத்திய பிறகு அளவு, எண்ணிக்கை, பேப்பர், நிறம் அல்லது பினிசிங் மாற்றினால் அது புதிய வேலையாகக் கருதப்பட்டு, புதிய மதிப்பீடு மற்றும் பணம் தேவைப்படலாம்.
3. Proof approval & design · வடிவமைப்பு மற்றும் ஒப்புதல்
You must check and approve the proof, text, spelling, names, dates and images before printing. Anything printed exactly as per your approved proof is not treated as a press mistake.
அச்சிடுவதற்கு முன் வடிவமைப்பு, உரை, எழுத்துப்பிழை, பெயர்கள், தேதிகள், படங்கள் ஆகியவற்றை நீங்கள் பார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டும். உங்கள் ஒப்புதலுக்கு ஏற்ப அச்சிட்டவை பிழையாகக் கருதப்படாது.
Keep all content at least 5 mm inside the edges on all four sides of the design.
டிசைனின் நான்கு பக்கங்களிலும் ஓரத்திலிருந்து குறைந்தது 5 மி.மீ. இடைவெளி விட்டு, உரை மற்றும் முக்கிய விவரங்களை அமைக்க வேண்டும்.
Prepare and send designs in CMYK colour mode to avoid colour changes during printing.
அச்சிடும்போது நிறம் மாறாமல் இருக்க, டிசைனை CMYK முறையில் தயாரித்து அனுப்ப வேண்டும்.
If you select “Design ready: No”, a design charge is added based on the finished size. The charge is shown in the estimate before you confirm.
“டிசைன் தயாரா: இல்லை” எனத் தேர்ந்தால், finished size அடிப்படையில் டிசைன் கட்டணம் சேர்க்கப்படும். உறுதிப்படுத்துவதற்கு முன் மதிப்பீட்டில் அது காட்டப்படும்.
4. Payment & receipt · பணம் மற்றும் ரசீது
Payment is made by UPI / QR as shown on the payment screen, for the exact confirmed amount including GST.
பணம் திரையில் காட்டப்படும் UPI / QR மூலம், GST உடன் உள்ள உறுதிப்படுத்திய தொகையையே செலுத்த வேண்டும்.
A receipt is issued after the payment is verified in our office. Sending a UPI reference number or a screenshot is not by itself payment confirmation.
பணம் எங்கள் வங்கியில் வந்து சேர்ந்ததை அலுவலகம் உறுதிப்படுத்திய பிறகே ரசீது வழங்கப்படும். UPI எண் அல்லது ஸ்கிரீன்ஷாட் அனுப்புவது மட்டும் பணம் வந்ததாக ஆகிவிடாது.
Order processing and printing begin only after 100% of the payment is received.
முழுத் தொகையும் (100%) கிடைத்த பிறகே ஆர்டர் செயல்படுத்தப்பட்டு அச்சிடுதல் தொடங்கும்.
5. Your files, logos & copyright · பைல்கள் மற்றும் பதிப்புரிமை
By sending us a file you confirm that you own it, or have permission to print it, including all text, logos, photographs and trademarks inside it.
நீங்கள் அனுப்பும் பைலில் உள்ள உரை, லோகோ, படம், வணிகக்குறி ஆகியவற்றை நீங்களே உருவாக்கியதோ அல்லது அச்சிட அனுமதி பெற்றதோ என்று நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள்.
JEEVA PRESS is not responsible for any copyright, trademark or content dispute on material supplied by the customer.
வாடிக்கையாளர் அனுப்பிய பொருள்களால் ஏதேனும் பதிப்புரிமை அல்ல உள்ளடக்க பிரச்சனை வந்தால் JEEVA PRESS பொறுப்பாகாது.
Files sent for a job are kept for our records and are not shared or sold to anyone.
வேலைக்காக அனுப்பிய பைல்கள் எங்கள் பதிவுக்காக வைக்கப்படும்; யாருடனும் பகிரவோ அல்லது விற்கவோ இலலை.
6. Reprints & corrections · திரும்ப அச்சிடுதல்
If printed sheets do not match your approved proof because of a press error in printing or finishing, we reprint the affected quantity or refund the printed value.
அச்சிடுதல் அல்லது பினிசிங்வில் எங்கள் பிழையால் அச்சிட்டது உங்கள் ஒப்புதலுக்கு ஏற்ப இல்லாவிட்டால், பாதிக்கப்பட்ட எண்ணிக்கையை மீண்டும் அச்சிடுவோம் அல்லது அச்சு மதிப்பைத் திருத்துவோம்.
If the difference comes from the file you sent or from your approved proof, a reprint is charged at the normal rate.
நீங்கள் அனுப்பிய பைல் அல்லது நீங்கள் ஒப்புதல் அளித்த வடிவமைப்பால் வேறுபாடு வந்தால், மீண்டும் அச்சிட வழக்கமான விலை வரும்.
Small colour and shading differences are normal in offset printing and are not a defect.
ஆஃப்செட் அச்சிடுதலில் சிறிய நிற மற்றும் ஷேடிங் வேறுபாடுகள் இயல்பானவை; அது பிழை அல்ல.
7. Delivery · டெலிவரி
The delivery date is agreed when the order is confirmed. It starts from the day your final approval and payment are received.
டெலிவரி தேதி ஆர்டர் உறுதிப்படுத்தும்போதே நிர்ணயிக்கப்படும். இறுதி ஒப்புதல் மற்றும் பணம் கிடைத்த நாளிலிருந்து அது எண்ணப்படும்.
Late approvals, file changes, delayed payment or a paper that is out of stock with the mill will move the delivery date; we inform you as soon as we know.
ஒப்புதல் தாமதம், பைல் மாற்றம், பணம் தாமதம் அல்லது மில்லில் பேப்பர் இல்லாமை ஆகியவை டெலிவரி தேதியை மாற்றும்; தெரிந்தவுடன் உங்களுக்குத் தெரிவிப்போம்.
Printed goods must be collected within 15 days of printing completion.
அச்சடித்த பொருளை அச்சிடுதல் முடிந்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் வாங்கிச் செல்ல வேண்டும்.
8. Cancellation & refund · ரத்து மற்றும் திரும்பப் பெறுதல்
Once the design you submitted has been printed, the order cannot be cancelled and no remaining amount will be refunded.
நீங்கள் அனுப்பிய டிசைன் அச்சிடப்பட்டுவிட்டால், ஆர்டரை ரத்து செய்ய முடியாது. மீதிப் பணம் திருப்பித் தரப்படாது.
If we cannot print the job for any reason, we inform you and refund any amount you have paid, on your request.
ஏதேனும் காரணத்தால் நாங்கள் அச்சிட முடியாவிட்டால் உங்களுக்குத் தெரிவித்து, நீங்கள் கேட்டால் செலுத்திய தொகையைத் திருப்பித் தருவோம்.
9. GST & invoice · வரி மற்றும் விலைப்பட்டியல்
The invoice is raised in the name and GSTIN you give at the time of the order. Changes after the invoice is posted may need a correction entry.
விலைப்பட்டியல் நீங்கள் ஆர்டர் நேரத்தில் கொடுத்த பெயர் மற்றும் GSTIN-இல் வழங்கப்படும். பட்டியல் இட்ட பிறகு மாற்றம் தேவைப்பட்டால் திருத்தப் பதிவு தேவைப்படலாம்.
10. Governing terms · பொதுவானவை
These terms apply to every job booked through this website. The version shown here at the time of your order is the one that applies.
இந்த வலைத்தளத்தில் புக்கான ஒவ்வொரு வேலைக்கும் இந்நியமங்கள் பொருந்தும். உங்கள் ஆர்டர் நேரத்தில் இங்கு காட்டப்படும் பதிப்பே அமையும்.
Matters not covered by these terms are governed by Indian law. Any dispute is subject to the jurisdiction of the Dharmapuri District Court, Tamil Nadu.
இந்த விதிமுறைகளில் குறிப்பிடப்படாத விஷயங்களுக்கு இந்தியச் சட்டங்கள் பொருந்தும். ஏதேனும் தகராறு ஏற்பட்டால், அது தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.
Questions about these terms: contact us on the details shown on the Contact page.
இந்நியமங்கள் பற்றிய கேள்விகள்: Contact பக்கத்தில் உள்ள விவரங்களில் தொடர்பு கொள்ளலாம்.